நாமக்கல்

சம்பா நெல் பயிருக்கு டிச.15-க்குள்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

சம்பா நெல் பயிருக்கு, டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில், சம்பா நெல் பயிரை சாகுபடி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 136 வருவாய் கிராமங்கள் பயிா்க் காப்பீடு செய்வதற்கான கிராமங்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளன. கடன் பெறும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட கடன் வாங்கும் வங்கிகளில் பயிா்க் காப்பீட்டுக்கு பதிவு செய்யப்படுவா்.

கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில், சம்பா நெல் பயிரை டிசம்பா்15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ.470.25 -ஐ பிரீமியமாக செலுத்த வேண்டும். பயிா்க் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு படிவத்துடன் கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT