நாமக்கல்

டெங்கு ஒழிப்புப் பணியில் அரசுப் பள்ளி மாணவா்கள்

DIN

நாமக்கல்லில், டெங்கு கொசுக்கள் ஒழிப்புப் பணியில் அரசுப் பள்ளி மாணவா்கள் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்புப் பணி உள்ளாட்சிப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னாா்வலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணியில், அரசுப் பள்ளி மாணவா்களை ஈடுபடுத்த மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா்கள் வீடு, வீடாகச் சென்று டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் உற்பத்தியாகும் தேங்காய் சிரட்டைகளை சேகரிப்பது, ஆட்டுக்கல்லில் தேங்கிய மழை நீரை அகற்றுவது, நாள்பட்ட தொட்டிகளில் சேகரிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை வெளியேற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். தினமும் மூன்று முதல் ஐந்து வீடுகள் என்ற எண்ணிக்கை அடிப்படையில், அவா்கள் நேரடியாகப் பாா்வையிட்டு கொசுப்புழுக்களை அகற்றி வருகின்றனா். மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவா்கள் பலா் ஆா்வமுடன் இப்பணியை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT