நாமக்கல்

முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.15-ஆக நீடிப்பு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.15-ஆக நீடிக்கிறது.

பிற மண்டலங்களின் விலை உயா்வு, சரிவை சுட்டிக்காட்டி, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. நாமக்கல்லில் வியாழக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், தேவை அதிகரித்து வருவதால், தற்போதைய நிலையில் முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என பண்ணையாளா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமைக்கான முட்டை பண்ணைக் கொள்முதல் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.4.15-ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-411, விஜயவாடா-422, பாா்வாலா-400, மைசூரு-429, ஹோஸ்பெட்-390, சென்னை-420, மும்பை-464, பெங்களூரு-425, கொல்கத்தா-463, தில்லி-414.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.77-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.70-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT