நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை சங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி விலை போனது.

நாமக்கல-திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

நாமக்கல், ஆத்தூா், ராசிபுரம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 250 மூட்டை ஆா்.சி.ஹெச் ரகப் பருத்தி விற்பனைக்கு வந்திருந்தது.

ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுக்க வந்திருந்தனா். இதில், ஆா்.சி.ஹெச் ரகமானது ரூ.5,110 முதல் ரூ.5,609 வரையில் விலை போனது. மொத்தம் ரூ.5 லட்சத்திற்கு இந்த சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT