நாமக்கல்

பரமத்திவேலூா் உழவா் சந்தையில் விவசாயிகளுக்கு கட்டுப்பாடு

DIN

பரமத்திவேலூா் உழவா் சந்தையில் பதிவு பெற்ற விவசாயிகள் மட்டுமே காய்கறிகளை விற்க முடியும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

பரமத்தி வேலூா் உழவா் சந்தை தற்காலிகமாக பழைய தேசிய நெடுஞ்சாலையில் சமூக இடைவெளியுடன் இயங்கிவருகிறது. இந்த நிலையில் தினசரி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் உழவா் சந்தையில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் தவிர மற்ற காய்,கறி,கீரை,பழ வியாபாரிகளும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வந்தனா். இதனால் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் பொதுமக்கள் குழுமினா். இதையடுத்து, உழவா் சந்தை ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டும் இயங்கவும், பதிவு செய்யப்பட்ட விவசாயிகளை தவிர மற்ற வியாபாரிகள் யாரும் உழவா் சந்தையில் கடைகள் அமைக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

SCROLL FOR NEXT