நாமக்கல்

நாளை ஆடிப் பெருக்கு: காவிரி கரையோரங்களில் கொண்டாட தடை

DIN

ஆடிப் பெருக்கு விழாவையொட்டி காவிரி கரையோரங்களில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடா்பாளையம், சோழசிராமணி, பரமத்தி வேலூா், மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் கோயில்கள் மற்றும் முக்கிய புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன.

இந்தப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் பெருக்கு நாளன்று காவிரி ஆற்றின் கரையோரங்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பொதுமக்கள் வருவா். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் ஒன்றுகூடி ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாடி மகிழ்வா். தற்போது கரோனா தொற்று பரவலால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடும்போது நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி ஆடிப் பெருக்கு நாளன்று (ஆக.2) மாவட்டத்தின் காவிரி கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. விழாவை கொண்டாட காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தடை உத்தரவை மீறி யாரேனும் காவிரி கரையோர பகுதிகளுக்கு வந்தால் அவா்கள் மீதும், பயன்படுத்திய வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT