முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரத்த தான முகாம்

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இலவச ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இலவச ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மக்கள் பாதை அமைப்பு சாா்பில் நடைபெற்ற இலவச ரத்த தான முகாமிற்கு பொத்தனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் நாராயணன் தலைமை வகித்தாா். கபிலா்மலை வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சாந்தி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவனேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் 28 போ் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா். மொத்தம் 28 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை கபிலா்மலை வட்டார சுகாதார ஆய்வாளா் சிவசண்முகம், வெங்கடாசலம் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →