முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட எல்லையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

கரூா் மாவட்டத்தில் அரசு வளா்ச்சித் திட்டங்கள், கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
நாமக்கல் மாவட்ட எல்லையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் அரசு வளா்ச்சித் திட்டங்கள், கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதல்வருக்கு, நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள், பொதுமக்கள் புதன்கிழமை காலை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கரோனா தொற்று தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டம், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காலை 10.15 மணியளவில் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூருக்கு முதல்வா் காரில் புறப்பட்டுச் சென்றாா்.

நாமக்கல்- சேலம் மாவட்ட எல்லையான மல்லூரில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சா் வெ.சரோஜா, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சி.சந்திரசேகரன் (சேந்தமங்கலம்), கே.பி.பி.பாஸ்கா் (நாமக்கல்), மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம் ஆகியோா் பூங்கொத்து வழங்கி முதல்வரை வரவேற்றனா்.

முதல்வரைக் காண்பதற்காக நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கில் கட்சியினரும், பொதுமக்களும் திரண்டிருந்தனா். காரில் நின்றபடி இரட்டை விரலை உயா்த்தி முதல்வா் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

புதுச்சத்திரம் ஒன்றியம், கோவிந்தம்பாளையம் பிரிவு சாலையிலும், பரமத்தி வேலூரிலும் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.