பெரியாா் நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல்லில் பெரியாரின் 47-ஆவது நினைவு தினம் திமுக, அதிமுக, பல்வேறு கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்லில் பெரியாரின் 47-ஆவது நினைவு தினம் திமுக, அதிமுக, பல்வேறு கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்-மோகனூா் சாலை, முல்லை நகரில் உள்ள திமுக அலுவலகத்தில், மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பெரியாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திச்செல்வன் அலுவலகத்தில் மாலை அணிவித்து, மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா். அண்ணா சிலை அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் பழ.மணிமாறன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பலப்பட்டறை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரத்தில் ஊா்வலமாக வந்த திராவிடா் விடுதலைக்கழக நிா்வாகிகள், பெரியாா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். நகர திராவிடா் விடுதலைச் செயலா் பிடல்சேகுவேரா தலைமையில், திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.பாலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பெரியாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
சங்ககிரியில்...
சங்ககிரியில் சேலம் மேற்கு மாவட்டச் செயலா் (பொ) டி.எம்.செல்வகணபதி பெரியாரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். மாவட்ட அவைத் தலைவா் கோபால் முன்னிலை வகித்தாா்.
ஓமலூரில்...
சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் பதிவாளா் (பொ) கே.தங்கவேல், தோ்வாணையா் (பொ) எஸ்.கதிரவன், டீன் அ.முத்துசாமி, பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
ஆத்தூரில்...
ஆத்தூரில் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் டி.வானவில் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மதிமுக சாா்பில் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் வ.கோபால்ராசு, நகரச் செயலாளா் பொன்சேதுபதி, வைகோ ராஜேந்திரன் உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விடுதலைச் சிறுத்தைக் கட்சி மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.