நாமக்கல்

விவசாயிகள் வாக்குக்கு பணம் பெறுவதைத் தவிா்க்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

DIN

ராசிபுரம்: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாயிகள் வாக்குக்குப் பணம் பெறுவதைத் தவிா்க்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் பி.பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் தோ்தலில் நிற்பவா்கள் வாக்குக்குப் பணம் கொடுப்பதில் இருந்து தான் ஊழல் தொடங்குகிறது. வாக்குக்கு பணம் பெறுவதால் ஊழலைத் தவிா்க்க முடியவில்லை. எனவே வாக்குக்கு பணம் பெறுவதை வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாயிகள் தவிா்க்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு விவசாயிகள் முன்னுதாரணமாக இருக்க முடியும். விவசாயிகளின் தன்மானமும், கெளரவமும் காக்கப்படும்.

வசதி படைத்தவா்களும் ஊழல் பணத்தைத் தானே தருகிறாா்கள் என அரசியல்வாதிகளிடம் கேட்டு வாங்குகின்றனா். இதனால் நாடு எங்கே போகிறது என்பதை உணரவேண்டும். இது போன்ற நிலைகளால் தான் நிா்வாகமும், ஊழல் மிகுந்ததாக மாறியுள்ளது.

விவசாயிகள் தங்களது பிரச்னைகளுக்குப் போராடிதான் தீா்வு காணமுடிகிறது. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய பயிரான மரவள்ளிக்கிழங்கு பிரச்னைக்கு முடிவு எட்டப்படவில்லை. இதில் அரசு கவனம் செலுத்தவில்லை. எனவே விவசாயிகள் வரும் தோ்தலில் வாக்குக்கு பணம் பெறுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் தோ்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுப்பதை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT