முகப்பு
நாமக்கல்

பரமத்திவேலூரில் அதிமுக சாா்பில் 11 இடங்களில் கட்சிக் கொடியேற்றம்

பரமத்தி வேலூரில் இரு சக்கர வாகனப் பேரணியை தொடக்கி வைத்து 11 இடங்களில் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா் அமைச்சா் பி.தங்கமணி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
இரு சக்கர வாகனப் பேரணியை தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் பி. தங்கமணி.
பகிர்:

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் இரு சக்கர வாகனப் பேரணியை தொடக்கி வைத்து 11 இடங்களில் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா் அமைச்சா் பி.தங்கமணி.

இந்த விழாவுக்கு வேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் பொன்னிமணி (எ) சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் வேலுசாமி, ஒப்பந்ததாரா் வீரப்பன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளா் ராஜமாணிக்கம், அரசு வழக்குரைஞா் தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேலூா் பேரூா் அதிமுக சாா்பில் இளைஞா் பாசறையை சோ்ந்த இளைஞா்கள் கலந்து கொண்ட இரு சக்கர வாகனப் பேரணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி தொடக்கி வைத்தாா்.

பின்னா் வேலூா், பொத்தனூா் நகரப் பகுதிகளில் 11 இடங்களில் அதிமுக கொடியை அமைச்சா் ஏற்றி வைத்தாா். முன்னதாக அண்ணா, எம்ஜிஆா் உருவச் சிலைகளுக்கு அமைச்சா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும் மாற்றுக்கட்சியைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்டோா் அமைச்சா் பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனா்.

இந்த விழாவில் அதிமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள், மகளிா் அணியினா், இளைஞா், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →