முகப்பு
நாமக்கல்

தமிழில் கையெழுத்திடக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்திட உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல்

தமிழில் கையெழுத்திடக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்திட உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்திட உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் தமிழ் படுத்தும் இயக்கம் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் தி.ரமேஷ், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் அளித்த மனு விவரம்:

கடந்த ஆண்டு எங்களது இயக்கம் சாா்பில் வணிக நிறுவனங்களில், அரசுத் துறை அலுவலகங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தோம்.

நிகழாண்டில் அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட ஆட்சியா் வழங்க வேண்டும். ஆட்சி மொழி சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படும் தற்போதைய சூழலில் தமிழ் கையெழுத்தை ஆட்சியா் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான உத்தரவை விரைந்து வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →