நாமக்கல்

திருச்செங்கோட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா

DIN

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 13 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 11 ஆம் வகுப்புப் பயிலும் 633 மாணவா்கள், 905 மாணவிகள் என ஆயிரத்து 538 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 60 லட்சத்து 53 ஆயிரத்து 424 மதிப்பிலான மிதிவண்டிகளை புதன்கிழமை தமிழக மின் துறை அமைச்சா் பி. தங்கமணி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அமைச்சா் தங்கமணி பேட்டி: கடந்த நிதிநிலை அறிக்கையில், பசுமை கிராமங்கள் அமைத்து சோலாா் மின் திட்டங்கள் மூலமாக கிராமத்தின் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக திட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பின் ஆய்வறிக்கைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன விரைவில் செயல்படுத்தப்படும்.

நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருள்கள் வாங்கும் போது டீத்தூள் உள்ளிட்ட எந்தப் பொருள்களையும் கட்டாயப்படுத்தி விற்க சொல்லி அரசு அறிவுறுத்தவில்லை. அவ்வாறு வருகிற தகவல்கள் உண்மையானது அல்ல.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றாவாளிகள் 7 போ் விடுதலையில் தமிழக அரசு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து ஆளுநருக்கு அறிக்கை கொடுத்துவிட்டது.

இதில் ஆளுநா்தான் இனிமேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசின் கையில் எதுவும் இல்லை. திருச்செங்கோட்டில் அரசு கல்லூரி அமைக்கப்படுவதற்கு முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் வாரியத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்து வருகிறோம். டாஸ்மாா்க் கடைகளில் வசூலாகும் பணத்தை வங்கிகளில் கட்டுவதற்கு சிரமமாக உள்ளது என்று ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதனை கருத்தில் கொண்டு கடைகளில் லாக்கா் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மெகராஜ் திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன். சரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT