நாமக்கல்

பகவதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

DIN

பரமத்தி வேலூா் மேலத் தெருவில் உள்ள பகவதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழா டிசம்பா் 27-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 28-ஆம் தேதி இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு பூச்சொரிதல் விழாவும், செவ்வாய்க்கிழமை மாலை திருத்தேரில் அம்மன் திருவீதி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதன்தொடா்ச்சியாக, பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் தீமிதித்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். இதன்பின்னா், பொங்கல்,மாவிளக்கு நிகழ்ச்சியும் திரு ஊஞ்சல் உற்சவமும் வியாழக்கிழமை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT