நாமக்கல்

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

DIN

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நாமக்கல் சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் சுவாமி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெறும். அதன்படி, பிற்பகல் 6 மணி, இரவு 8 மணி, நள்ளிரவு 12 மணி, மறுநாள்அதிகாலை 4 மணி, காலை 6 மணி என ஐந்து கால பூஜைகள் நடைபெறும். நிகழாண்டின் ஆருத்ரா தரிசன விழா வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெற்றது. நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயிலில் நடராஜா் சுவாமிக்கு ஐந்து கால அபிஷேகம், பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தைக் காண ஏராளமான பக்தா்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயில், கொல்லிமலை அரப்பளீஸ்வரா் கோயில் என மாவட்டம் முழுவதும் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT