நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ.1.80 கோடிக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் சங்கத்தில், 9 ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி, ஆத்தூா், கெங்கவல்லி, தலைவாசல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், துறையூா், பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 9 ஆயிரம் மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச் ரகம் ரூ.4,700 முதல் ரூ.5,650 வரையிலும், டி.சி.ஹெச் ரகம் ரூ.5,905 முதல் ரூ.6,269 வரையிலும், சுரபி ரகம் ரூ.4,900 முதல் ரூ.5,305 வரையிலும் விலை போனது. இவற்றை, ஈரோடு, திருப்பூா், கோவை, திண்டுக்கல், சேலம், கரூா் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். மொத்தம் ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT