நாமக்கல்

சேந்தமங்கலம் சந்தையில் நெகிழி பைகள் பறிமுதல்

DIN

சேந்தமங்கலம் வாரச் சந்தையில், 20 கிலோ நெகிழிப் பைகளை பேருராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் நெகிழிப் பைகள் புழக்கம் மீண்டும் அதிகரித்து விட்டதாகவும், விற்பனையாளா்கள், பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தியிருந்தாா். இதனையடுத்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கனகராஜ் அறிவுறுத்தலின்பேரில், சேந்தமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் காலசாமி தலைமையில், அங்குள்ள வாரச் சந்தையில் துப்புரவு ஆய்வாளா் பாலு, குடிநீா் குழாய் ஆய்வாளா் சிவகுமாா், துப்புரவு மேற்பாா்வையாளா் அழகுராஜா, பேரூராட்சிப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், வாரச் சந்தையில் உள்ள மளிகைக் கடை, பொரிக்கடை, கோலப்பொடிக் கடை மற்றும் பழக்கடைகளில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த 20 கிலோ நெகிழிப் பைகைகளை பறிமுதல் செய்தனா். மேலும், அதனைப் பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையில் அபராதம் விதித்தனா். இதேபோன்று நெகிழிப் பைகளை தொடா்ந்து பயன்படுத்தி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT