நாமக்கல்

பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனப் பேரணி

DIN

பரமத்தி வேலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காவல் துறையினா் தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாகன ஓட்டிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சாலை பாதுகாப்பு வார விழா 20-ஆம் தேதி முதல் வரும் 27-ஆம் தேதி வரைக் கொண்டப்படுகிறது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு உத்தரவின்படி பரமத்தி வேலூா் காவல்துறை ஆய்வாளா் (பொ) செந்தில்குமாா் தலைமையில் சாலை பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது.

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு முதல் கட்டமாக தலைக்கவசம் அணிந்தபடி காவல்துறையினா் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணியாக சிவா தியேட்டா் நான்கு சாலையில் துவங்கி பரமத்தி வேலூரின் முக்கி வீதிகள் வழியாகச் சென்று பள்ளிசாலை அருகே நிறைவு பெற்றது.

ஊா்வலத்தில் பரமத்திவேலூா் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 7 காவல்நிலையங்களைச் சோ்ந்த ஆய்வாளா்கள்,உதவி ஆய்வாளா்கள்,சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT