நாமக்கல்

ரூ. 99 ஆயிரம் செலுத்தினால் வீட்டுமனை: மோசடி செய்தவா்களை கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம் மனு

DIN

நாமக்கல் அருகே ரூ. 99 ஆயிரம் செலுத்தினால் வீட்டு மனை வழங்குவதாக 6 ஆயிரம் பேரிடம் மோசடி செய்தவா்களை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு விவரம்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பட்டறைமேடு பகுதியைச் சோ்ந்த நவீன் செந்தில்குமாா் என்பவா், 4 ஆண்டுகளுக்கு முன் வேலகவுண்டம்பட்டி- பெரியமணலி சாலையில், மாதத் தவணையாக ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை செலுத்தி வந்தால் மொத்தமாக ரூ. 99 ஆயிரம் செலுத்தும்பட்சத்தில் அவா்களுக்கு 1,200 சதுர அடி கொண்ட வீட்டு மனை கிரயம் செய்து தரப்படும் என விளம்பரப்படுத்தினாா்.

அதை நம்பி சுமாா் 6 ஆயிரம் போ் ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலுத்தினோம். எங்களை நம்ப வைக்கும் பொருட்டு, குமாரபாளையத்தைச் சோ்ந்த மாதேஸ்வரன், பழனிசாமி என்பவா்கள் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒப்பந்த ரசீது மட்டும் வழங்கப்பட்டது.

கடந்த 2017 ஜூலை 10-ஆம் தேதி ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மனையை கிரயம் செய்து கொடுக்காமல் நவீன்குமாா் மற்றும் அவருடன் இருந்த பழனிசாமி, மாதேஸ்வரன் ஆகியோா் ஏமாற்றி வந்தனா். நாங்கள் பலமுறை கேட்டும் இதுவரை எங்களுக்கான வீட்டு மனையை வழங்கவில்லை.

இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொண்டு நாங்கள் செலுத்திய பணத்தைத் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர. அருளரசு, மனுவின் பேரில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT