நாமக்கல்

தலைமை ஆசிரியா்களுக்கு மேலாண்மைக் குழு பயிற்சி

DIN

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு குறித்த ஒரு நாள் பயிற்சி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு தினங்களாக நடைபெற்றது.

இதில் வட்டார அளவிலான கருத்தாளா்களும் பங்கேற்றனா். இதனை முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா தொடக்கி வைத்தாா். இப்பயிற்சி வகுப்பில், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 குறித்த சிறப்பு அம்சங்கள், குழந்தைகளின் உரிமைகள், பாலின பாகுபாடு, பேரிடா் மேலாண்மை, உள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள், சமூக தணிக்கை, தூய்மைப் பள்ளி குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், உதவித் திட்ட அலுவலா் குமாா், மாவட்டத் திட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் அம்பிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இரு தினங்களாக நடைபெற்ற பயிற்சியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் 145 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT