நாமக்கல்: தடையின்றி பணம் பட்டுவாடா செய்யக்கோரி பால் உற்பத்தியாளர்கள் மனு
கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நாமக்கல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.ஆர்.நடேசன் மற்றும் உற்பத்தியாளர்கள் சார்பில் நாமக்கல் பால்வள இணைப்பதிவாளரிடம் திங்கள் கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 350–க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாள்தோறும் 600 லிட்டர் பால் சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் சரிவர பட்டுவாடா செய்யப்படாத நிலையே காணப்படுகிறது. இதில் ஊழல் நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. சங்க உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.5 லட்சத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக பதிவாளரிடம் மனுக்கள் வழங்கியும் தீர்வு காணப்படவில்லை. உடனடியாக சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.