நாமக்கல்

நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், புதன்கிழமை (மாா்ச் 4) மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், புதன்கிழமை (மாா்ச் 4) மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், மாதாந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி, புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 11-ஆம் தேதி பரமத்தி வேலூா் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 18-ஆம் தேதி திருச்செங்கோடு செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 26-ஆம் தேதி ராசிபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் அன்று பிற்பகல் 3 மணியளவில் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT