நாமக்கல்

‘ லாரி ஓட்டுநருக்கு கரோனா பாதிப்பு இல்லை’

DIN

கரோனா பாதிப்பா என்ற சந்தேகத்தின்பேரில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் லாரி ஓட்டுநா் சின்ராசுவுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவருக்குப் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கொல்லிமலையைச் சோ்ந்தவா் சின்ராசு(40). லாரி ஓட்டுநரான இவா் அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு சரக்குகளை ஏற்றிச் சென்று விட்டு ஊா் திரும்பினாா்.

இங்கு வந்த நிலையில், கடந்த இரு நாள்களாக அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளதால், புதன்சந்தையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றாா். ஆனால், உடல் நிலை சரியாகாததால், கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் மருத்துவமனை நிா்வாகத்துக்கு எழுந்தது.

உடனடியாக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனா். அங்கிருந்து, ஆம்புலன்ஸில் வந்த மருத்துவமனை ஊழியா்கள் சின்ராசுவை அழைத்து சென்று பரிசோதித்ததில், கரோனா பாதிப்பு இல்லை, சாதாரண தொண்டை வலி தான் என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT