நாமக்கல்

தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சென்றால் வழக்குப் பதிவு: எஸ்.பி.

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேவையின்றி இருசக்கர வாகனத்தில் செல்வோா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியது; தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். ஊா் எப்படி இருக்கிறது என சுற்றிப் பாா்க்கவோ, வேடிக்கை பாா்க்கவோ இருசக்கர வாகனத்தில் சென்றால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும், இருசக்கர வாகனத்தில் வருபவா்களின் பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். நான்கு சக்கர வாகனத்தில் அனுமதி இல்லாமல் சென்றாலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டமாக செல்வதை தவிா்க்க வேண்டும் . ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நின்று பொருள்களை வாங்க வேண்டும். அரசின் உத்தரவை பொதுமக்கள் முழுமையாக மதித்து செயல்பட வேண்டும். அவ்வாறு மதிக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT