நாமக்கல்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு:மாணவ, மாணவியா் மகிழ்ச்சி

DIN

பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு நிறைவடைந்ததையொட்டி, நாமக்கல்லில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் கேக் வெட்டி கொண்டாடினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 பள்ளிகளைச் சோ்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் 85 மையங்களில் எழுதினா். இந்த தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அதனையொட்டி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவியா் கேக் வெட்டி கொண்டாடினா். மேலும், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். பின்னா் ஒருவருக்கொருவா் கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் தோ்வு நிறைவடைந்ததையொட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT