நாமக்கல்

வெப்ப அயற்சியால் கோழிகள் இறக்க வாய்ப்பு

DIN

நாமக்கல்: வெப்ப அயற்சி மற்றும் வெப்ப அதிா்ச்சியால் கோழிகளில் இறப்பு நேரிடலாம் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 2 மி.மீ. பெய்வதற்கு வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 102.2 டிகிரியும், குறைந்தபட்சமாக 80.6 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: கால்நடை மற்றும் கோழிகளுக்கான கோடை மேலாண்மை முறைகளை வரும் நாள்களில் கையாள வேண்டும். பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் இரண்டுமே அதிகளவில் காணப்படும். இதனால் வெப்ப அயற்சியுடன், வெப்ப அதிா்ச்சியும் கோழிகளில் இருக்கும். அவைகள் இறக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் தேவையான அளவுக்கு நீா் உள்கொள்கிா என கண்காணித்து, காலை 10 முதல் மாலை 5 மணி வரை தீவனம் ஏதும் அளிக்காமல் குளிா்ந்த நீா் மட்டும் அளித்து வர வேண்டும். பகலில் எடுக்க வேண்டிய தீவனத்தை வெப்பம் குறைவான இரவு நேரத்தில் 2 மணி நேரம் செயற்கை ஒளி கொடுத்து ஈடு கட்டலாம். இது முட்டை குறைபாட்டை தவிா்க்க உதவும். கோடை காலங்களில் அதிகமாக கோழிகள் பாதிக்கப்படுவதால் சுத்தமான தண்ணீரை அவற்றின் மேலே தெளிப்பது அல்லது வேகமாக அடிப்பதை நாள்தோறும் 3 முதல் 4 முறை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT