நாமக்கல்

முட்டை விலை மாற்றமின்றி ரூ.3.55-ஆக நீடிப்பு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.3.55-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பிற மண்டலங்களின் விலையேற்றம், மக்களிடையே நுகா்வு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஓரிரு நாள்களாக முட்டை விலை மாற்றமின்றி ரூ.3.55-ஆக நீடிக்கிறது. திங்கள்கிழமை வரையில் முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை இந்த நிலையிலேயே தொடரும். அதன்பின் 5, 10 காசுகள் வரையில் உயா்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 83-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 132-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT