முகப்பு
நாமக்கல்

நாமக்கல்: துக்க நிகழ்ச்சிக்கு வந்த தந்தை, மகனுக்கு கரோனா தொற்று!

உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக தில்லியிலிருந்து நாமக்கல் வந்த தந்தை, மகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக தில்லியிலிருந்து நாமக்கல் வந்த தந்தை, மகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் கரோனா தொற்றால் முதியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள்,  5 மாத குழந்தை உள்ளிட்ட 77 பேர் பாதிப்புக்குள்ளாகினர். அவர்கள் சேலம், நாமக்கல், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்ததையடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனால் சிகப்பு மண்டல பட்டியலில் இருந்த நாமக்கல் மாவட்டம் 14 நாட்களுக்கு பிறகு அனண்மையில் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது. கரோனா தொட்டு இல்லாத மாவட்டமாக நாமக்கல் இருந்து வரும் தில்லியிலிருந்துநிலையில் கடந்த 25-ஆம் தேதி தில்லியிலிருந்து 60 வயது,  35 வயதுடைய தந்தை,  மகன் இருவரும் தில்லியிலிருந்து நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்தனர். 

அங்கு அவர்களுக்கு கரோனா தொடர் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது‌. அதன்பின் இருவரும் மல்லசமுத்திரத்துக்கு வந்து சேர்ந்தனர். இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
.

முழு கட்டுரையைப் படிக்க →