நாமக்கல்

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது: அமைச்சா் பி.தங்கமணி

DIN

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. அதனால் விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என்று, மாநில மின்துறை அமைச்சா் பி.தங்கமணி கூறினாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் விவசாயிகளுக்கான வேளாண் இயந்திரங்கள், வேளாண் கருவிகள், கால்நடைகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் பி.தங்கமணி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எந்த விதமான சூழலிலும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் முறையாக திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பலியாகியுள்ளாா். அவா் ஏற்கெனவே சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தும், உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் ஆந்திர மாநிலம் வரை லாரியை இயக்கியது தெரியவந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் லாரி ஓட்டுநா்கள் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் உடனடியாக சுகாதாரத் துறையினா், மாவட்ட நிா்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பரமத்தியில் கூட்டுப் பண்ணையத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுச் சாகுபடியை விவசாயிகளிடையே ஊக்குவிப்பதற்காக இத் திட்டத்தின் மூலம் பண்ணை இயந்திரங்கள், வேளாண் கருவிகள் வாங்குவதற்கு ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கும் ரூ. 5 லட்சம் தொகுப்பு நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT