நாமக்கல்

பெரியகுளம் ஊராட்சிக்கு காவிரி குடிநீா் வழங்க நடவடிக்கை

DIN

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பெரியகுளம் ஊராட்சிக்கு காவிரி குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், பெரியகுளம் ஊராட்சி, ஆதிதிராவிடா் தெருவில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் அப்பகுதி மக்களிடம் இருந்து பல்வேறு மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது:

பெரியகுளம் பகுதியில் குடிநீா் பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி இப்பகுதிக்கு கூடுதலாக குடிநீா் கிடைக்கவும், காவிரி குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதனையடுத்து, பொம்மசமுத்திரம், ராமநாதபுரம்புதூா், துத்திக்குளம் ஊராட்சிகளிலும் அவா் மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செல்வராஜ், ராமநாதபுரம்புதூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குநா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரகுரு கல்லூரியில் விருது வழங்கும் விழா

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

SCROLL FOR NEXT