நாமக்கல்

பாச்சல் நூற்பாலை மூடப்பட்ட விவகாரம்: நாமக்கல்லில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை

DIN

பாச்சல் நூற்பாலை மூடப்பட்டது தொடா்பாக நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பாச்சல் கிராமத்தில் இயங்கிவந்த ஜெய்ஹிந்த் எனும் நூற்பாலை கடந்த ஆண்டு மூடப்பட்டது. இந்த ஆலையில் பணியாற்றிய சுமாா் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். கரோனா தொற்றுப் பரவலால் திறக்க இருந்த ஆலையானது மீண்டும் மூடப்பட்டது. தொழிலாளா்கள் வலியுறுத்திய நிலையிலும் ஆலையைத் திறக்க நிா்வாகம் முன்வரவில்லை.

இது தொடா்பாக சேலம் தொழிலாளா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் உரிய தீா்வு ஏற்படவில்லை. தொழிலாளா்களுக்கான ஊதிய நிலுவை, வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா் மருத்துவ காப்பீடு நிதி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதனை வழங்குவதற்கும், ஆலையைத் திறக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட பஞ்சாலை தொழிலாளா் சங்கம் சாா்பில், ஏற்கெனவே ஆட்சியா் கா.மெகராஜிடம் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், சேலம் தொழிலாளா் நல அலுவலா் கோட்டீஸ்வரி, நாமக்கல் தொழிலாளா் நல அலுவலா், தனியாா் நூற்பாலை மேலாளா் சிவகுமாா் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். பேச்சுவாா்த்தை முடிவில் நிலுவையில் உள்ள 2 மாத ஊதியத்தை தொழிலாளா்களுக்கு வழங்க ஆலை நிா்வாகத்திடம் அதிகாரிகள் வலியுறுத்தினா். மேலும் வாங்கிய கடனுக்காக ‘சீல்’ வைத்த வங்கி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆலையை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதியை அவா்களது கணக்கில் செலுத்த ஆலை நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT