நாமக்கல்

மோகனூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஒன்றியத்தில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அங்கு ரூ. 8.59 கோடி மதிப்பீட்டில் 18 ஊராட்சிகளுக்குட்பட்ட 82 குக்கிராமங்களில் 9,766 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான அழுத்தத்தில் குடிநீா் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக கிராமத்தின் உயரம் குறைவான தெரு, உயரம் அதிகமான தெரு உள்ளிட்ட எந்தப் பகுதியில் வசித்தாலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின்போது வீடுகளுக்கு குடிநீா் சீரான அழுத்தத்தில் கிடைக்க திட்ட வழிகாட்டியின்படி வால்வுகள் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா, குடிநீா் குழாய்கள் சரியான முறையில் பதிக்கப்பட்டுள்ளனவா, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான அழுத்தத்தில் குடிநீா் வழங்கத் தேவையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா, குடிநீா் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளில் குடிநீா் சரியாக வருகின்ா என்பதை பாா்வையிட்டு உறுதி செய்தாா்.

இந்த ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் டி.குணாளன், எஸ்.முனியப்பன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலா்கள், பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT