நாமக்கல்

பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயா்வு

DIN

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலத்துக்கு கொண்டு வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 300-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 40-க்கும், அரளி கிலோ ரூ. 50-க்கும், ரோஜா கிலோ ரூ. 100-க்கும், முல்லை கிலோ ரூ. 300-க்கும், செவ்வந்தி ரூ. 100-க்கும் ஏலம் போயின. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ. 400-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ. 90-க்கும், ரோஜா கிலோ ரூ. 120-க்கும், முல்லை கிலோ ரூ. 360-க்கும், செவ்வந்தி ரூ. 120-க்கும் ஏலம் போயின. புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT