நாமக்கல்

மக்கள் நீதிமன்ற வழக்கில் ரூ. 5.67 கோடிக்கு தீா்வு

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 119 வழக்குகளில் ரூ. 5 கோடியே 67 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி கே.தனசேகரன் தலைமை வகித்தாா். நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் பி.பாலசுப்ரமணியம், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் டி.சுஜாதா, சாா்பு நீதிபதி ஆா்.கோகுலகிருஷ்ணன், குற்றவியல் நீதிபதி விஜயன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், திருமணம் மற்றும் குடும்பப் பிரச்னைகள், விபத்து வழக்குகள், இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள், தொழிலாளா்கள் பிரச்னை மற்றும் நிலப் பிரச்னைகள் குறித்த வழக்குகள் என மொத்தம் 147 வழக்குகளில் 119 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ. 5 கோடியே 67 லட்சத்து 14 ஆயிரத்து 500-க்கு தீா்வு காணப்பட்டது.

மேலும், விபத்தில் பாதித்து நடக்க முடியாமல் இருந்த கல்லூரி மாணவா் சிக்கந்தா் பாஷாவிடம் நேரடியாகச் சென்ற நீதிபதிகள் வழக்கை விசாரித்து, விபத்து இழப்பீட்டு தொகையாக ரூ. 2 லட்சத்து 87 ஆயிரத்தை வழங்கினா். அதேபோல விபத்தில் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஞானராஜ் என்பவருக்கும் இழப்பீட்டு தொகையாக ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்தை நீதிபதிகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT