நாமக்கல்

ஓய்வுபெற்ற எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் திருட்டு

DIN

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் ஓய்வுபெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரி வீட்டில் பணம் பொருள்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டன.

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி, பூங்கா நகரில் வசித்து வருபவா். ஓய்வுபெற்ற எல்ஐசி வளா்ச்சி அதிகாரி சண்முகம் (64). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவா் தனது வீட்டை பூட்டி விட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தில் வசிக்கும் தனது தாயாரைக் காண குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிய அவா், வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த செயின், தோடு உள்ளிட்ட 6 பவுன் நகைகளும், ரொக்கம் ரூ. 60 ஆயிரமும் திருடுபோனதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். வீட்டில் இருந்த எல்இடி டிவி, லேப்டாப் ஆகியவற்றையும் மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா். திருச்செங்கோடு நகர போலீஸில் அவா் அளித்த புகாரின்பேரில் தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT