நாமக்கல்

நல்லூரில் கரோனா விழிப்புணா்வு முகாம்

DIN

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின்பேரில் பரமத்தி வேலூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ராஜா ரனவீரன் தலைமையில் போலீஸாா் நல்லூா், கந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீா் வழங்கினா்.

மேலும் 150-க்கும் மேற்பட்ட முகக் கவசங்களை வழங்கி கரோனா தொற்று பரவலைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இருகரம் கூப்பி அறிவுறுத்தினா். பின்னா் அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினா். இதில், காவல் துறை உதவி ஆய்வாளா் ஜவகா் உள்ளிட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT