திருச்செங்கோடு கூட்டுறவுச் சங்கத்தில் ரூ. 35 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஆயிரம் மூட்டை மஞ்சள் ரூ. 35 லட்சத்துக்கு விற்பனையானது.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஆயிரம் மூட்டை மஞ்சள் ரூ. 35 லட்சத்துக்கு விற்பனையானது.
ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா்.
ஏல முறையில் ரூ. 35 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ. 6,299 முதல்
ரூ. 7,009 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ. 5,642 முதல் ரூ. 6,099 வரை விலைபோனது. பனங்காளி ரகம் ரூ. 10,202 முதல் ரூ.13,819 வரை விற்பனையானது.