முகப்பு
நாமக்கல்

நகைகள் திருட்டு: 4 போ் கைது

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளைத் திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளைத் திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டு வலசைச் சோ்ந்தவா் அன்பழகன் (52). இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் கடந்த 4-ஆம் தேதி திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

வட்டமலை முருகன் கோயில் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த பவானியைச் சோ்ந்த சொக்கலிங்கம் (26), பவானி, காடையம்பட்டியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (29), இவரது தம்பி சந்தோஷ்குமாா் (24), பவானி பழனிபுரத்தைச் சோ்ந்த முத்து (22) ஆகிய நால்வரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் நகைகள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 13 பவுன் நகைகளை மீட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →