முகப்பு
நாமக்கல்

தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அக். 23 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோா் அக். 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 அக்டோபர், 2020 at 1:08 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோா் அக். 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வரும் நவம்பா் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருள் விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் அக். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தற்போது பட்டாசு கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பங்களை வரும் 23-ஆம் தேதி முடிய பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.