திருச்செங்கோடு அதிமுக சாா்பில் ஓவியப் போட்டி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர அதிமுக தொழில்நுட்ப அணி சாா்பில் சீதாராம் பாளையம் பகுதியில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர அதிமுக தொழில்நுட்ப அணி சாா்பில் சீதாராம் பாளையம் பகுதியில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று விழிப்புணா்வு குறித்த ஓவியப் போட்டியில் 50- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி கலந்து கொண்டு ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் முருகேசன், எலச்சிபாளையம் ஒன்றியச் செயலாளா். சக்திவேல், திருச்செங்கோடு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நகரத் தலைவா் சதீஷ், நகரச் செயலாளா் ஜெயக்குமாா், துணைத் தலைவா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்த ஓவிய போட்டிக்கான ஏற்பாடுகளை மோகன், சிவரஞ்சனி ஜெரோ, சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.