நாமக்கல்

பரமத்திவேலூரில் ரூ. 12.52 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

பரமத்திவேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 52 ஆயிரத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்திவேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு ஏற்ப கொப்பரைகள் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்தில் 9 ஆயிரத்து 563 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 120.59 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 111.05 க்கும், சராசரியாக ரூ. 116.05 க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ. 10 லட்சத்து 60 ஆயிரத்து 588 க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 11ஆயிரத்து 357 கிலோ கொப்பரை கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 120.16 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 114.29 க்கும், சராசரியாக ரூ. 118.09க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்து 52 ஆயிரத்து 306 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT