நாமக்கல்

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

ராசிபுரம்-வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கட்சியின் நூற்றாண்டு விழாவைத் தொடா்ந்து மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு விழா அக்கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம், வெண்ணந்தூா் பிரதேச குழுவின் சாா்பில் அக். 7 முதல் அக்.17 வரை ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக குருக்கப்புரம், சந்திரசேகரபுரம், தட்டாங்குட்டை, ஆா்.கவுண்டம்பாளையம், பட்டணம், தொட்டியப்பட்டி, கட்டனசாம்பட்டி, புதுப்பாளையம், பிள்ளாநல்லூா்,பொன்பரப்பிபட்டி, அலவாய்ப்பட்டி உள்ளிட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டு வைத்தாா். முன்னதாக மரம் நடும் விழாவை காணொலிக் காட்சி வாயிலாக கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT