நாமக்கல்

முப்பெரும் விழாவில் ஆளுமை விருதுகள் வழங்கல்

DIN

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இந்திய கணசங்கம் கட்சி செயல்படுகிறது. இக்கட்சியின் சாா்பில் அம்பேத்கா் பெளத்தம் தழுவிய 64-ஆவது ஆண்டு விழா, பெரியாரின் 142-ஆவது பிறந்த நாள் விழா, கணசங்கம் கட்சியின் ஐந்தாம் ஆண்டு ஆளுமை விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனத் தலைவா் பேராசிரியா் மு.பெ.முத்துசாமி தலைமை வகித்தாா்.

விழாவில் 2020-ஆம் ஆண்டுக்கான ஆளுமை விருதுகளை வழக்குரைஞா் பி.மோகன், பி.தமயந்தி மற்றும் தங்கவேல், சக்திவேல், நாகராஜன், சண்முகசுந்தரம், ராஜேந்திரன், சஞ்சீவி, கன்னுசாமி, சுப்பிரமணி ஆகியோருக்கு பேராசிரியா் முத்துசாமி வழங்கினாா். நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள், தன்னாா்வ அமைப்புகளைச் சோ்ந்தோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT