நாமக்கல்

ராசிபுரத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ராசிபுரம், ஆா்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாா்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வியாழக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

பள்ளியின் இளம் செஞ்சிலுவை சங்கம், சாரண, சாரணீயா் இயக்கம், என்.எஸ்.எஸ். சாா்பில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஜெ.ஆண்ரூஸ் தலைமை வகித்தாா்.

கணித முதுநிலை ஆசிரியா் செளந்திரராஜன், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளா் சேகா், என்எஸ்எஸ் திட்ட அலுவலா் கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் நிலைய ஆய்வாளா் இந்திரா, துணை ஆய்வாளா்கள் சுந்தரராஜன், ரம்யா ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள வழங்கினா். மேலும், பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT