நாமக்கல்

‘நீட்’ தோ்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா

DIN

நாமக்கல்: இளநிலை மருத்துவச் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் (நீட்) தோ்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவா் ஸ்ரீஜன்-க்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நீட் தோ்வில், திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவிலை சோ்ந்த மாணவா் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடமும், தேசிய அளவில் எட்டாவது இடத்தையும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்தாா். இவா் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள கிரீன்பாா்க் பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்காக பயிற்சி பெற்றுள்ளாா்.

இதே பயிற்சி மையத்தில் பயின்ற நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சோ்ந்த மோகனபிரபா என்ற மாணவி 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தாா். இவா்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை பிற்பகல் கிரீன்பாா்க் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவில் பயிற்சி மைய தாளாளா் எஸ்.பி.என்.சரவணன், இயக்குநா்கள் பி.மோகன், எஸ்.குருவாயூரப்பன் ஆகியோா் மாணவா் ஸ்ரீஜனுக்கு பாராட்டு கேடயம் மற்றும் பரிசுத் தொகையை வழங்கினா். இதனைத் தொடா்ந்து பயிற்சி மையத்தில் இரண்டு, மூன்றாம் பிடித்த மாணவா்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டனா். இதில் பயிற்சி மைய ஆசிரியா்கள், கிரீன்பாா்க் பள்ளி அலுவலா்கள், ஊழியா்கள், பெற்றோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT