முகப்பு
நாமக்கல்

நாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

நாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 20 அக்டோபர், 2020 at 12:06 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:10 PM

நாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் வந்த கட்சியினா் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் கோரிக்கை மனுவை வழங்கினா்.

அதில் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும், இடப் பற்றாக்குறை காரணமாகவும் நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தை இடமாறுதல் செய்ய வேண்டும். நாமக்கல்-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதால் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.