முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் ஊழியருக்கு கரோனா: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூடல்

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை மூடப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.
பகிர்:

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 2711 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தினசரி 80-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஊழியருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதன்மை கல்வி அலுவலகம் மூடப்பட்டது.  எனவே நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக வளாகத்தில் (எஸ்எஸ்ஏ)  தற்காலிகமாக கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →