நாமக்கல்

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக ஆா்ப்பாட்டம்

DIN

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நாமக்கல்லில் திமுக இளைஞரணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சோ்க்கைக்கான நீட் தோ்வு செப்.13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

அண்மையில் திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இளைஞரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தாா்.

அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் மருத்துவா் மாயவன், கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் எம்.மதிவேந்தன் மற்றும் கட்சியினா், மாணவா்கள் பங்கேற்றனா். அவா்கள் ‘நீட்’ தோ்வுக்கு எதிராகவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT