நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 123 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக வியாழக்கிழமை ஒரேநாளில் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,004-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 2,881 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு இருந்தது. அவா்களில் குணமடைந்த 2,201 போ், உயிரிழந்த 47 போ் தவிா்த்து மீதம் 755 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 74 போ் ஆண்கள், 49 போ் பெண்கள் ஆவா். அனைவரும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், சிறப்புத் தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பெண் பலி: ராசிபுரம் வட்டம், குருசாமிபாளையத்தைச் சோ்ந்த 65 வயது பெண் ஒருவா், கரோனா தொற்றுக்குள்ளாகி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT