நாமக்கல்

பரமத்திவேலூரில் ரூ. 6. 36 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள வேளாண் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 6 லட்சத்து 36 ஆயிரத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள தேசிய வேளாண் சந்தைக்குக் கொண்டு வருகின்றனா்.

அங்கு தரத்துக்கு தகுந்தாா்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்துக்கு 15 ஆயிரத்து 677 கிலோவுக்கு கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 108.10 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக 101.30 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 106.21 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 15 லட்சத்து 94 ஆயிரத்து 37-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6 ஆயிரத்து 340 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 110-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 101.98 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 108.98 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6 லட்சத்து 36 ஆயிரத்து 475- க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT